×

இடைத்தேர்தலில் தவெகவை எதிர்த்து பிரச்சாரம்: தமிழக விவசாயிகள் சங்கம் அறிவிப்பு..!!

 

உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் நாமக்கல் வேலுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

தவெக கட்சி சட்டசபை தேர்தல் வாக்குறுதியில், தேர்தலில் வெற்றிபெற்றால், தமிழகத்தில் உள்ள சிறு, குறு விவசாயிகள் கூட்டுறவு தொடக்க வேளாண்மை கடன் சங்கங்களில் வாங்கிய பயிர் கடனை முழுவதுமாக தள்ளுபடி செய்யப்படும், பெரிய விவசாயிகள் வாங்கிய பயிர் பயிர் கடன் 50 சதவீதம் தள்ளுபடி செய்யப்படும் என தெரிவித்தனர்.

ஆட்சி பொறுப்பிற்கு வந்தவுடன் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யவில்லை. இது தமிழக விவசாயிகளிடம் மிகப்பெரிய ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் தற்போது ஏற்பட்டுள்ள கடுமையான வறட்சியால் பயிர் சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது. எனவே பாகுபாடின்றி அனைத்து விவசாயிகளும் கூட்டுறவு சங்கங்களில் வாங்கிய பயிர் கடனை பாகுபாடின்றி முழுமையாக தள்ளுபடி செய்ய கோரி, பல்வேறு விவசாயிகள் சங்கத்தினர் தவெக அரசுக்கு கோரிக்கை வைத்தனர். தமிழக அரசு அதை நிறைவேற்ற தவறிவிட்டது.

இதற்கு தக்க பதிலடி கொடுக்கும் வகையில் உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில், அடுத்த மாதம் தமிழகத்தில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு தொகுதியிலும், தேர்தலில் தவெகவை எதிர்த்து பிரச்சாரத்தில் ஈடுபடுவோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.