×

“குழந்தைகளை பயன்படுத்தி வீடியோவா? உடனே மன்னிப்பு கேட்கணும்”- விஜய்க்கு பறந்த கடிதம்

 

குழந்தைகளை பயன்படுத்தி வீடியோக்கள் உருவாக்குவதை தவெக தலைவர் விஜய் நிறுத்த வேண்டும் என தமிழ்நாடு குழந்தைகள் உரிமை கண்காணிப்பகம் கடிதம் எழுதியுள்ளது.

இதுதொடர்பாக தவெக தலைவர் விஜய்க்கு தமிழ்நாடு குழந்தைகள் உரிமை கண்காணிப்பகம் எழுதியுள்ள கடிதத்தில், குழந்தைகளை பயன்படுத்தி வீடியோக்கள் உருவாக்குவதை உடனே நிறுத்த வேண்டும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. பொது மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் என்றும் கடிதத்தில் வலியுறுத்தியுள்ளது. மேலும் Emotional Blackmail கொண்ட Shorts பகிர்வதை தவிர்க்க வேண்டும் என விஜய்க்கு அறிவுறுத்தியுள்ள தமிழ்நாடு குழந்தைகள் உரிமை கண்காணிப்பகம், தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்கள் மீறப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையத்துக்கும், தமிழ்நாடு மாநில குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்துக்கும் புகார் அளித்துள்ளது. குழந்தைகள் மூலம் வாக்காளர்களை பாதிப்பது ஜனநாயகத்திற்கு எதிரானது என்றும், ஏற்கனவே உள்ள வீடியோக்களை உடனடியாக நீக்கவும் கடிதத்தில் வலியுறுத்தியுள்ளது.