☰
×

தமிழக முதல்வர் விஜய்யை காண காத்திருந்த பள்ளி மாணவி மயக்கம்..!

 

புதுக்கோட்டையில் இன்று (நவ்.2) நடைபெறும் பல்வேறு அரசு நிகழ்வுகளில் கலந்துகொள்ள முதலமைச்சர் விஜய் வருகை தந்துள்ளார். இதையொட்டி அவரை காண்பதற்காக நீண்ட நேரமாக காத்திருந்த பள்ளி மாணவி ஒருவர் திடீரென மயங்கி விழுந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் உடனடியாக செயல்பட்டு, அம்மாணவியை மீட்டு அங்குள்ள மிதிவண்டி நிறுத்தும் இடத்திற்கு அழைத்து சென்று முதலுதவி அளித்தனர். 

முதலமைச்சர் விஜய்யின் வருகைக்காக சாலையோரம் நீண்ட நேரமாக ஏராளமான பொதுமக்களும் பள்ளி மாணவ, மாணவிகளும் காத்திருந்தனர். அப்போது கூட்ட நெரிசலிலும் வெயிலிலும் நீண்ட நேரம் காத்திருந்த ஒரு பள்ளி மாணவி திடீரென மயங்கி விழுந்தார். 

மாணவி மயங்கி விழுந்ததைக் கண்ட அங்கிருந்த பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், உடனடியாக அந்த மாணவியைத் தூக்கிக்கொண்டு ஓடி முதலுதவி சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

<a style="border: 0px; overflow: hidden" href=https://youtube.com/embed/9VqLY_b9reo?autoplay=1&mute=1><img src=https://img.youtube.com/vi/9VqLY_b9reo/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" style="border: 0px; overflow: hidden;" width="640">