தவெக எம்எல்ஏ பல்லவியின் குழந்தை ஆடையில் கையெழுத்திட்ட முதல்வர் விஜய்..!
சென்னை திரு.வி.க.நகர் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்டு 22 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர் எம்.ஆர்.பல்லவி. பிரச்சாரத்தின்போது 8 மாத கர்ப்பிணியாக இருந்த பல்லவிக்கு, தேர்தல் முடிந்த சில நாட்களிலேயே ஆண் குழந்தை பிறந்தது.
சென்னை திரு.வி.க நகர் தொகுதியின் தவெக சட்டமன்ற உறுப்பினரான எம்.ஆர்.பல்லவி, நடந்து வரும் சட்டமன்றக் கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காகத் தனது கைக்குழந்தையுடன் வருகை தந்து வருகிறார். சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெறும் நேரங்களில் குழந்தையைப் பராமரிக்கத் தனியாக அறை ஒதுக்கப்பட்டுப் பராமரிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், சட்டமன்ற வளாகத்தில் முதலமைச்சர் விஜயை சந்தித்துப் பேசிய எம்.எல்.ஏ பல்லவி, தனது குழந்தையை அவரிடம் காண்பித்தார். அப்போது குழந்தையை ஆசையோடு கொஞ்சி மகிழ்ந்த முதலமைச்சர், அக்குழந்தை அணிந்திருந்த ஆடையில் “பிரியமுடன் விஜய்” எனத் தனது கையொப்பமிட்டு அன்பைப் பகிர்ந்துகொண்டார்.
இச்சம்பவம் குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி, பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றன.
தவெக எம்.எல்.ஏ. பல்லவியின் குழந்தை ஆடையில் கையெழுத்திட்ட முதல்வர் விஜய்#cmvijay #tvkmla #vijaylove #withlove #tvkvijay #jayaplus pic.twitter.com/FJmQECViYf
— Jaya Plus (@jayapluschannel) September 8, 2026