×

முக்கிய அறிவிப்பு: தமிழகத்தில் 717 மதுபான கடைகளை மூட முதல்வர் விஜய் உத்தரவு..!

 

தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழக மாநில வாணிபக் கழகத்தால் 4,765 மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் தற்போது நடத்தப்பட்டு வருகிறது.

அதில், வழிபாட்டுத்தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பஸ் நிலையங்கள் அருகிலிருந்து 500 மீட்டர் வரை அமைந்துள்ள கடைகளை ஆய்வு செய்து கண்டறியுமாறுமுதல்வர் விஜய் உத்தரவிட்டு இருந்தார்.

அதன்படி 717 மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் செயல்பட்டு வருவது கண்டறியப்பட்டது. இந்த கடைகள் அனைத்தையும் அடுத்த இரண்டு வாரத்திற்குள் மூடுமாறு முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.