×

இன்று கோவை வருகிறார் தமிழக முதல்வர் ஸ்டாலின்..! முழு பயண விவரம் இதோ..!

 
கோவை அவிநாசி சாலையில் உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை 10.1 கீலோமீட்டர் நீளத்துக்கு கட்டப்பட்ட உயர்மட்ட மேம்பாலத்தை திறந்து வைக்க முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் இன்று காலை கோவை வருகிறார். காலை 9:30 மணிக்கு அவர் கோவை விமான நிலையம் வருகிறார்.அங்கிருந்து காலை 9.45 மணிக்கு கொடிசியாவில் நடைபெறும் ஸ்டார்ட் அப் மாநாட்டுக்கு தலைமை தாங்க செல்கிறார். பின்னர் 10.40 மணிக்கு அங்கிருந்து கிளம்பி 10.50க்கு கோல்டுவின்ஸ் சென்று மேம்பாலத்தை துவக்கி வைத்து, 11.10 மணிக்கு மேம்பாலத்தில் பயணித்து பார்த்து ஆய்வு செய்கிறார்.

பின்னர் 11.20 மணிக்கு அரசு காலை கல்லூரி சென்று உயிர் சாலை பாதுகாப்பு உறுதிமொழி நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். பின்னர் பகல் 12 மணி - 12.45மணி வரை குறிச்சியில் தங்க நகை பூங்கா தொடர்பான நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.

இதை முடித்துக்கொண்டு, எல்&டி பைபாஸுக்கு 1 மணி அளவில் சென்று, அங்கிளர்ந்து சின்னியம்பாளையம் பயணித்து, மதியம் 1.15மணிக்கு கோவை சர்வதேச விமான நிலையத்துக்கு வந்து அங்கிருந்து சென்னை செல்கிறார்.

முதலமைச்சர் வருகையை முன்னிட்டு கோவை மாநகரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 1200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.