×

அம்பேத்கர் பிறந்தநாளில் முதல்வர் ஸ்டாலின் புகழஞ்சலி..!

 


தமிழ்நாட்டில் தேர்தலையொட்டி, முதல்வரும், திமுக தலைவருமான ஸ்டாலின் மாநிலம் முழுவதும் பிரசாரம் மேற்கொண்டுள்ளார்.
அதன் ஒருபகுதியாக வேலூர் மாவட்டம் கே.வி. குப்பத்தில், இன்று (ஏப். 14) காலை நடைப்பயிற்சி மேற்கொண்ட அவர் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்தார்.

அதனைத் தொடர்ந்து அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாளான சமத்துவ நாளையொட்டி கே.வி. குப்பத்தில் உள்ள அம்பேத்கர் உருவச் சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தியதோடு, அவரது சிலைக்கு கீழ் வைக்கப்பட்டிருந்த அண்ணல் அம்பேத்கரின் திருவுருவப் படத்திற்கும் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

“ஒரு சமூகத்தின் முன்னேற்றத்தை, பெண்கள் எட்டியுள்ள முன்னேற்றத்தின் அளவினாலே நான் அளவிடுகிறேன்.” – அண்ணல் அம்பேத்கர்.

புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்தநாளில், அரசியலமைப்பைப் பாதுகாக்கவும், சமூகநீதியை நிலைநாட்டவும், ஒடுக்கப்பட்ட ஒவ்வொரு குரலையும் காக்கவும் நமது உறுதியை வலிமைப்படுத்துவோம்!

இந்தியாவின் வலிமை நம் பன்மைத்துவம்தான்; திணிக்கப்படுகிற ஒற்றைத்தன்மை அல்ல.

முன்னேற்றமே அளவுகோல் எனில், ஒற்றைத்தன்மையையும், ஏற்றத்தாழ்வுகளையும் புறந்தள்ளி, பன்மைத்துவத்தையும் சமத்துவத்தையும் தேர்ந்தெடுப்போம்; நீதியை நிலைநாட்டுவோம்!

என குறிப்பிட்டுள்ளார்.