×

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனிச் செயலாளர்கள் நியமனம்..  

 

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் தனிச் செயலாளர்களை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.  

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனிச் செயலாளர்களாக 4 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியாற்றி வருகின்றனர்.  அவர்களில் முதன்மை தனிச் செயலாளர்களாக இருந்த இருந்த நா.முருகானந்தம் ஐ.ஏ.எஸ். , புதிய தலைமை செயலாளராக  நியமிக்கப்பட்டார்.  முன்னதாக  தலைமை செயலாளராக இருந்த சிவதாஸ் மீனா, நேற்று  முன்தினம்  ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணைய தலைவராக நியமனம் செய்யப்பட்டதை அடுத்து  தமிழ்நாடு அரசின் புதிய தலைமைச் செயலாளராக முருகானந்தம் நியமனம் செய்யப்பட்டார்.  அதனைத்தொடர்ந்து  தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் தனிச் செயலர்களில் ஒருவராக  ஜி.லட்சுமிபதி நியமனம் செய்யப்பட்டார். 

இந்நிலையில் தற்போது  முதலமைச்சரின் முதல் தனிச் செயலாளராக உமாநாத் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டிருக்கிறார். தொடர்ந்து 2வது தனிச்செயலாளராக சண்முகம் ஐஏஎஸ்ஸும் , 3வது தனிச் செயலாளராக ஐ.ஏ.எஸ் அதிகாரி அனு ஜார்ஜும் நியமிக்கப்பட்டுள்ளனர்.  தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளராக நேற்று பொறுப்பேற்ற முருகானந்தம் ஐஏஎஸ் இந்த உத்தரவினை பிறப்புத்துள்ளார்.