“அஜித் வந்தால்தான் தமிழ்நாட்டை காப்பாற்ற முடியும்” - களமிறங்கிய ரசிகர்கள்..!!
தமிழ் சினிமாவில் விஜயின் போட்டி நடிகராக இருந்தவர் அஜித். தற்போது விஜய் அரசியலுக்கு சென்று விட்ட நிலையில் அஜித்துக்கு எந்த போட்டியும் இல்லை.. அதேநேரம் அஜித் சினிமாவில் கவனம் செலுத்தாமல் கார் ரேஸ்களில் கவனம் செலுத்தி வருகிறார்.. கடந்த இரண்டு வருடங்களுக்கு மேல் பல நாடுகளிலும் நடக்கும் மோட்டார் ரேஸ் கார் பந்தயங்களில் கலந்து கொண்டு வருகிறார்..
விஜயை போல அஜித்துக்கு அரசியல் ஆர்வமெல்லாம் இல்லை. நான் எப்போதும் அரசியலுக்கு வர மாட்டேன்.. எனது சுயநலத்திற்காக எனது ரசிகர்களை பயன்படுத்த மாட்டேன் என பலமுறை அவர் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். ஆனால் பிரபல ஜோதிடர் ஒருவர் 2031ம் வருடம் அஜித் அரசியலுக்கு வருவார்.. அவர் முதலமைச்சராவார் என தெரிவித்திருக்கிறார்..
மேலும் அவரின் திரைப்படங்கள் தொடர்ந்து வசூலை குவிக்கும் எனவும் அவர் கூறியிருக்கிறார்.. இதில் ஆச்சரியம் என்னவெனில் இப்படி அஜித்தை பற்றி சொன்ன அந்த ஜோதிடர் 2026ம் வருடம் அமெரிக்கா ஈரான் இடையே போர் ஏற்படும்.. துபாயிலும் பாதிப்பு ஏற்படும்./. தமிழ்நாட்டில் கேஸ் சிலிண்டர் பிரச்சனை வரும்.. பெட்ரோலுக்காக மக்கள் வரிசையில் நிற்பார்கள் என்றெல்லாம் போன வருடமே கூறியிருந்தார்.. அவர் சொன்னது எல்லாமே நடந்திருக்கிறது.. எனவே அவர் அஜித்தை பற்றி சொன்னதும் நடக்குமா என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.
நடிகர் அஜித்தை அரசியலுக்கு அழைக்கும் வகையில், அவரது ரசிகர்கள் சிலர் இணைந்து “அனைத்து நண்பர்கள் முன்னேற்றக் கழகம்” என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கியுள்ளனர். 2031-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலை இலக்காகக் கொண்டு செயல்பட உள்ளதாக தெரிவித்த அவர்கள், அஜித் அரசியலுக்கு வந்து முதலமைச்சராக வேண்டும் என்றும், அவரது தலைமையில்தான் தமிழ்நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்றும் கூறினர். மேலும், அஜித்தின் சமூக அக்கறை மற்றும் பொதுமக்கள் மீதான அவரது அணுகுமுறையை முன்னிறுத்தி கட்சிப் பணிகளை மேற்கொள்ள இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர். அஜித் அரசியலுக்கு வருவாரா என்பது குறித்து இதுவரை அவர் தரப்பில் எந்த அறிவிப்பும் வெளியாகாத நிலையில், அவரது ரசிகர்கள் புதிய கட்சி தொடங்கியிருப்பது அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.