‘ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு’- சொன்னதை செய்த விஜய்!! நாளை தமிழக அமைச்சரவை விரிவாக்கம்
May 20, 2026, 20:12 IST
முதலமைச்சர் விஜய் தலைமையிலான அமைச்சரவை நாளை விரிவாக்கம் செய்யப்படுகிறது.
விஜய் தலைமையிலான தவெக அமைச்சரவையில் காங்கிரஸ் சேர ராகுல் காந்தி ஒப்புதல் அளித்துள்ளார். தமிழக அமைச்சரவையில் ராஜேஷ்குமார், விஸ்வநாதன் ஆகியோரை இணைக்க கார்கே, ராகுல் ஒப்புதல் அளித்ததை அடுத்து, 59 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ்நாடு அமைச்சரவையில் இடம்பெறுகிறது காங்கிரஸ். முதலமைச்சர் விஜய் தலைமையிலான அமைச்சரவை நாளை விரிவாக்கம் செய்யப்படுகிறது. நாளை காலை 10 மணியளவில் அமைச்சர்கள் பதவியேற்பு விழா நடைபெறுகிறது. புதிய அமைச்சர்கள் பதவியேற்பு விழாவுக்கான அதிகாரப்பூர்வ அழைப்பிதழ் வெளியாகியுள்ளது. நாளை காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் உட்பட மொத்தம் 20 அமைச்சர்கள் பதவியேற்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.