☰
×

தமிழகமே உற்றுநோக்கும் இடைத்தேர்தல் : காலை 11 மணி வாக்குப்பதிவு நிலவரம்..!

 

தாராபுரம், மதுராந்தகம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் கடந்த மாதம் அறிவித்தது. அதன்படி இந்த இரு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று நடைபெறுகிறது.


மதுராந்தகம் தொகுதி வாக்காளர் எண்ணிக்கை : 

மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தலில் மொத்தம் 2,11,295 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இதில் ஆண்கள் 1,03,943 பேர். பெண்கள் 1,07,288 பேர். மூன்றாம் பாலினத்தவர்கள் 64 பேர்.

தாராபுரம் தொகுதி வாக்காளர் எண்ணிக்கை : 

தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் மொத்தம் 2,22,875 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இதில் ஆண்கள் 1,06,875 பேர். பெண்கள் 1,15,523 பேர். மூன்றாம் பாலினத்தவர்கள் 8 பேர்.

காலை 9 மணி வாக்குப்பதிவு நிலவரம் : 

காலை 9 மணி நிலவரப்படி, மதுராந்தகத்தில் 15.99% வாக்குகளும், தாராபுரத்தில் 17.55% வாக்குகளும் பதிவாகி உள்ளன. அதேபோல், புதுச்சேரி தட்டாஞ்சாவடியில் 19.20% வாக்குகள் பதிவாகி உள்ளன.

காலை 11 மணி வாக்குப்பதிவு நிலவரம் :

மதுராந்தகம், தாராபுரம் தொகுதியில் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், காலை 11 மணி நிலவரப்படி, மதுராந்தகத்தில் 35.55 சதவிகித வாக்குகள் பதிவாகி உள்ளன. தாராபுரத்தில் 37.28 சதவிகித வாக்குகள் பதிவாகி உள்ளன.