#BREAKING : பட்ஜெட் 2026: பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.888 சேமிப்பு; கல்விக்கு ரூ.48,534 கோடி!
தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது. 2026-27ம் நிதியாண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை, நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். அப்போது, "அயலகத் தமிழர்களுக்கு தமிழ் கற்பிக்கும் பணிகள் ரூ.10 கோடியில் தொடங்கப்படும். திருக்குறளை அனைத்து மொழிகளிலும் மொழி பெயர்க்கும் திட்டம் நடந்து வருகிறது. சோழர், நொய்யல், வெண்கல அருங்காட்சியகங்கள் ரூ.285 கோடியில் அமைக்கப்படும்" என தெரிவித்தார்.
மகளிர் விடியல் பயணத்தின் மூலம் தமிழ்நாட்டில் ஒவ்வொரு பெண்ணும் மாதந்தோறும் ரூ.888 சேமிக்கிறார் - தங்கம் தென்னரசு
காலை உணவு திட்டத்தால் குழந்தைகளின் வருகை, கற்றல் திறன் அதிகரித்துள்ளது. காலை உணவு திட்டத்திற்காக கடந்த 4 ஆண்டுகளில் 1884 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. முதியோர்களுக்காக 25 இடங்களில் அன்புச் சோலைகள் அமைக்கப்பட்டுள்ளன. தாயுமானவர் திட்டம் மூலம் 27.40 லட்சம் பேர் பயணடைந்துள்ளனர்
அன்புக்கரங்கள் திட்டத்தின் மூலமாக 10,000 மேற்பட்ட மாணவர்கள் பயனடைந்துள்ளனர். மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக 1,471 கோடி ரூபாய் ஒதுக்கீடு. பெண் ஒதுவார்களை நியமித்தது தமிழ்நாடு அரசின் சாதனையாகும். நாட்டில் பெண் தொழிலாளர்களில் 41% தமிழகத்தில் உள்ளனர்
தமிழகத்தில் 19 இடங்களில் தோழி விடுதிகள் கட்டப்பட்டுள்ளன. உள்ளாட்சி அமைப்புகளில் 3,632 மாற்றுத்திறனாளிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாற்றுத்திறனாளிகளுக்கான பதவி உயர்வில் இடஒதுக்கீடு முறை அமல்படுத்தப்பட்டுள்ளது
பள்ளிக் கல்வித் துறை - ரூ. 48,534 கோடி ஒதுக்கீடு
மாற்றுத்திறனாளிகள் நலத்துறை - ரூ. 1,471 கோடி ஒதுக்கீடு
உயர் கல்வித்துறை - ரூ. 8,551 கோடி
அனைத்து சமூக பாதுகாப்பு திட்டங்கள் - ரூ. 5,463 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு
மாநகரப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யும் விடியல் பேருந்து திட்டத்தில் 888 கோடி முறை பயணம் செய்து பெண்கள் பயனடைந்துள்ளனர்.
மேலும், மாநிலம் முழுவதும் 6 லட்சம் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ. 1.40 லட்சம் கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.
மகப்பேறு இறப்பு விகிதம் மற்றும் சிசு இறப்பு விகிதம் தேசிய சாராசரியை விட தமிழ்நாட்டில் குறைவாகவே உள்ளது.