×

தமிழக சட்டசபைக் கூட்டம் 24-ஆம் தேதி வரை நடைபெறும் ..!

 

சபாநாயகர் அப்பாவு தலைமையில் நடைபெற்ற அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் தெரிவித்துள்ளதாவது, ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் 24-ஆம் தேதி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: -  22, 23 ஆம் தேதிகளில் கேள்வி-பதிலுடன் ஆளுநர் உரை மீதான விவாதம் நடைபெறும். 24-ஆம் தேதி முதல்வர் பதிலளிப்பார்.


தமிழகத்தில் நிலவும் பல்வேறு பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதால், இந்த சட்டசபைக் கூட்டம் அனல் பறக்கும்.. அதேபோல், சட்டசபைத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதால், சில முக்கிய அறிவிப்புகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.