அடுத்த 30 ஆண்டுகளில் தமிழ் சமூகமே அழியலாம்: பொது சுகாதார நிபுணர் கூறும் திடுக்கிடும் தகவல்..!!
Updated: Jul 31, 2026, 12:46 IST
பொது சுகாதார நிபுணர் குழந்தைசாமி ஒரு அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார்.
இளைஞர்களும் மதுபோதைக்கு அடிமையாகி வருவது கவலை அளிக்கும் விஷயமாக உள்ளது.1971 ஆம் ஆண்டு மதுவிலக்கு தமிழகத்தில் விலக்கிக் கொள்ளப்பட்டது. அன்று முதல் இன்று வரை 2 தலைமுறைகளாக தமிழர்கள் மதுவை குடிக்கிறார்கள். அவர்களுக்கு பிறந்த குழந்தைகளின் ஜீனிலும் பாதிப்பு இருக்கிறது. தொடர்ந்து 3ஆவது தலைமுறையும் மதுவை குடித்தால் குழந்தைகள் பிறக்கும் போதே மதுவுக்கு அடிமையாக பிறக்க வாய்ப்பிருக்கிறது.
ஆரோக்கியமாக இருந்த தமிழர்களின் டி.என்.ஏ மாற்றம் அடைந்து பேரிடர் உருவாகும். இன்னும் தொடர்ந்து குடித்தால் அடுத்த 30 ஆண்டுகளில் தமிழ்ச் சமூகமே அழிந்துவிடும். மதுவை ஒழிப்பதே முழு தீர்வு என தெரிவித்துள்ளார்.