தமிழ் சினிமா பிரபலம் திடீர் மரணம்..!! திரையுலகினர் கண்ணீர்
பிரபல ஒளிப்பதிவாளர் ஷாஜி குமார் கொச்சியில் காலமானார். படப்பிடிப்பு தளத்தில் பணியாற்றி கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்த அவர், உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
சம்பவத்தன்று, நடிகர் திலீப் நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகளுக்காக ஆலப்புழை சென்றிருந்தபோது, அங்குள்ள தங்கியிருந்த விடுதியில் ஷாஜி குமாருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக இது குறித்து பட இயக்குனர் உல்லாஸ் கிருஷ்ணாவிடம் அவர் தகவல் தெரிவித்தார். முதற்கட்டமாக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், பின்னர் மேல் சிகிச்சைக்காக கொச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகு அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு இயல்பாகப் பேசிக்கொண்டிருந்த சூழலில், ஞாயிற்றுக்கிழமை இரவு மீண்டும் உடல்நிலை மோசமடைந்ததைத் தொடர்ந்து அவர் உயிரிழந்தார்.
புகழ்பெற்ற ஒளிப்பதிவாளர் விபின் மோகனின் சீடரான ஷாஜி குமார், பல படங்களில் உதவியாளராகத் தனது திரைப் பயணத்தைத் தொடங்கி, பின்னாளில் ஒரு தனித்துவமான ஒளிப்பதிவாளராக உருவெடுத்தார். ஆரம்ப காலங்களில் பிலிம் கேமராக்களைக் கையாண்ட அனுபவம் கொண்ட இவர், டிஜிட்டல் தொழில்நுட்ப மாற்றங்களுக்கு ஏற்ப தன்னைத் தகவமைத்துக் கொண்டு, சிறந்த ஒளிப்பதிவு நுணுக்கங்களையும் வண்ணக் கலவைகளையும் திரையில் வெளிப்படுத்தினார். ஜோஷி, ஷாஜி கைலாஸ், வி.எம். வினு, எம். பத்மகுமார், வைசாக் எனப் பல முன்னணி இயக்குனர்களுடன் இவர் பணியாற்றியுள்ளார்.
திருவனந்தபுரத்தைச் சேர்ந்த இவர், நீண்ட காலமாகப் பெரும்பாவூரில் வசித்து வந்தார். இவருக்கு ஸ்மிதா என்ற மனைவியும், ஆர்யன் மற்றும் சூர்யன் என்ற இரு மகன்களும் உள்ளனர். புலிமுருகன், நாரன், ராமலீலா, ஒடியன், மதுர ராஜா மற்றும் சமீபத்திய படைப்புகளான அதீமனோகரம், ஒட்டக்கொம்பன் போன்ற படங்கள் இவரது ஒளிப்பதிவுத் திறமைக்குச் சான்றுகளாக விளங்குகின்றன. இவரது மறைவுக்குத் திரையுலகினர் பலரும் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.