பிரபல தமிழ் நடிகர் மருத்துவமனையில் அனுமதி..!
Updated: Apr 17, 2024, 13:49 IST
நடிகர் மன்சூர் அலிகான் உடல்நலக்குறைவால் குடியாத்தத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வேலூர் தொகுதியில் போட்டியிடும் அவர், தீவிரப் பரப்புரையில் ஈடுபட்டு வந்த நிலையில், திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. உடனே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்குத் தீவிரச் சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவருக்கு என்ன பிரச்னை ஏற்பட்டது என்பது குறித்து எந்தத் தகவலும் வெளியாகவில்லை.