×

தமிழகத்தை சேர்ந்த சிஆர்பிஎஃப் வீரர் விபத்தில் பலி - அன்புமணி இரங்கல்!!
 

 

ஜம்மு-காஷ்மீர் ஸ்ரீநகரில் நிகழ்ந்த சாலை விபத்தில் தமிழகத்தை சேர்ந்த  சிஆர்பிஎஃப் வீரர் உயிரிழந்துள்ளார். 


ஜம்மு காஷ்மீர் ஸ்ரீநகரில்  சாலை விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த சிஆர்பிஎஃப் வீரர் மணி உயிரிழந்துள்ளார்.  திருவள்ளூர் பள்ளிப்பட்டு அருகே உள்ள அதிமஞ்சரைப்பேட்டையை சேர்ந்த இவர் 12  சிஆர்பிஎஃப் வீரர்களுடன் பேருந்தில் சென்ற போது லாரி மோதி விபத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இதுகுறித்து பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி தனது டிவிட்டர் பக்கத்தில், காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் நிகழ்ந்த சாலை விபத்தில் திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டைச் சேர்ந்த துணை ராணுவ வீரர் எம்.என்.மணி வீரச்சாவடைந்த செய்தியறிந்து  அதிர்ச்சியடைந்தேன்.  நாட்டைக் காக்கும் பணியில் இன்னுயிரை ஈந்த மணிக்கு பா.ம.க. சார்பில் வீரவணக்கம் செலுத்துகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.