தாம்பரம் தவெக வேட்பாளர் சரத்குமார் 1,17,553 வாக்குகள் பெற்று வெற்றி
தாம்பரம் தொகுதியில் தவெக வேட்பாளர் சரத்குமார் 1,17,553 வாக்குகள் பெற்று வெற்றி வாகை சூடியுள்ளார்.
தாம்பரம் சட்டமன்ற தொகுதியில் தமிழக வெற்றி கழகம் கட்சி வேட்பாளர் டி.சரத்குமார் வெற்றி பெற்றதையடுத்து கட்சியினர் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். இதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சரத்குமார், “நான் வெற்றி பெற்றது தாம்பரம் தொகுதி மக்களின் வெற்றியாக பார்க்கிறேன். எனது கட்சி வெற்றியாக பார்க்கவில்லை, தாம்பரம் தொகுதியில் இதற்கு முன்பு பல ஊழல்கள் நடந்துள்ளது. முறையான அடிப்படை வசதிகள் எதுவும் செய்து தரவில்லை, நான் வெற்றி பெற்றதை தொடர்ந்து லஞ்சம், ஊழல் இல்லாத தூய்மையான தொகுதியாக தாம்பரம் சட்டமன்ற தொகுதியில் மாற்றுவேன். மக்கள் தமிழக வெற்றிக் கழகம் மற்றும் எங்கள் தலைவர் விஜயின் மீது வைத்திருந்த ஆதரவு மற்றும் நம்பிக்கையின் காரணமாக இந்த வெற்றி கிடைத்துள்ளது. மேலும் தாம்பரம் சட்டமன்ற தொகுதியில் அடிப்படை வசதி மோசமாக உள்ளது. அதற்காக என்னென்ன மாற்றம் தேவை என்பதை அறிந்து உரிய நடவடிக்கை விரைவில் எடுக்கப்படும். நான் சட்டமன்ற உறுப்பினராக முதல் முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளேன். களத்தில் என்ன பிரச்சனை இருக்கிறது என்பதை முழுமையாக ஆய்வு செய்து அனைத்தும் தீர்க்கப்படும்” என்றார்.