×

தமிழகத்தில் அதிகரிக்கும் பன்றிக்காய்ச்சல்: இந்த அறிகுறிகள் உங்களுக்கும் இருக்கா? எச்சரிக்கும் சுகாதாரத்துறை!

 

தமிழ்நாட்டிலும் பன்றிக்காய்ச்சல் வேகமாக பரவி வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அதன்படி, ஜனவரி மாதம் தமிழகத்தில் 19 பேருக்கு பன்றிக்காய்ச்சல் பாதிப்பு இருந்த நிலையில் தற்போது அந்த எண்ணிக்கை 339 ஆக அதிகரித்துள்ளது. அதேவேளை, பன்றிக்காய்ச்சல் அறிகுறிகளான திடீர் உயர் காய்ச்சல், இருமல்,

தொண்டை வலி, உடல் வலி , தசை வலி , மூட்டு வலி, தலைவலி, கடுமையான சோர்வு , குளிர் நடுக்கம், மூச்சுத் திணறல், சுவாசிப்பதில் சிரமம் , நெஞ்சு வலி போன்ற உடல்நலக்குறைவு ஏற்பட்டால் பொதுமக்கள் உடனடியாக மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்யுமாறு சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.