×

நாய் வளர்ப்பதில் என்ன தவறு? நானே வீட்டில் 3 நாய்கள் வளர்க்கிறேன்- எஸ்.வி.சேகர்

 

நாய் வளர்ப்பதில் என்ன தவறு? யாருக்கு என்ன பிடித்துள்ளதோ அதை வளர்க்க வேண்டியதுதானே? என நடிகர் எஸ்.வி.சேகர் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் எஸ்.வி.சேகர், “நாய் வளர்ப்பதில் என்ன தவறு? யாருக்கு என்ன பிடித்துள்ளதோ அதை வளர்க்க வேண்டியதுதானே? நானே வீட்டில் 3 நாய்கள் வளர்க்கிறேன். என் பேச்சை அந்த மூன்று நாய்கள் கேட்கின்றன. வாசலில்வரும் நாய்களைகூட வீட்டிற்குள் கூப்பிட்டுதான் சாப்பாடு போடுவேன். ஆனால் அது கடிப்பதற்கு எல்லாம் நாம பொறுப்பு கிடையாது. கடித்தால் தப்புதான். நாய்கள் மனிதர்களை கடிப்பதை ஏற்க முடியாதது. தெருவில் நாய்களெல்லாம் சண்டை போடுவதை விட்டுவிட்டு நாய் வளர்ப்பவர்கள் சண்டை போட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

இரவு 11 மணி ஆகிவிட்டது என்றால் நாய் இருக்கின்ற தெருக்கு நீங்கள் போக வேண்டாம் என சொன்னால் யாருமே யார் தெருவுக்கும் போக முடியாது. அவரவர் தெருவுக்கே போக முடியாது. நமது ஆதார் கார்டு காட்டினால், ஓ நீ இந்த தெருவா... அப்போ செல் என எந்த நாயாவது சொல்லுமா? என்ன இருந்தாலும் மிருகம் என்பது மிருகம்தான்.. எந்த நாயும் நமது பேச்சை கேட்காது. இது நான் வளர்க்கிற சிங்கம் என சொல்லிட்டு தலையை உள்ள விட்டு பாருங்கள்.” என்றார்.