×

விஜய் மாநாட்டுக்கு சென்றவர் சாவில் சந்தேகம் என புகார்

 

தவெக மாநாட்டுக்கு சென்று இறந்த மதன் என்பவரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது சகோதரர் சீனிவாசன் வேலூர் எஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகம் 2026 சட்டமன்ற தேர்தலை இலக்காகக்கொண்டு தீவிரமாக கட்சியை வலுப்படுத்தி வருகிறது. அண்மையில் மதுரையில் கழகத்தின் 2வது மாநில மாநாட்டை வெற்றிகரமாக நிறைவு செய்துவிட்டு வந்த தவெக தலைவர் விஜய், அடுத்ததாக தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.  

இந்நிலையில் தவெக மாநாட்டுக்கு சென்று இறந்த மதன் என்பவரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது சகோதரர் சீனிவாசன் வேலூர் எஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். கடந்த ஆகஸ்ட் 20 ஆம் தேதி சென்ற மதன், துவரங்குறிச்சி அருகே ஆகஸ்ட் 27 ஆம் தேதி சடலமாக மீட்கப்பட்டிருந்தார். யூடியூபர் முக்தார் என்பவர் அழைப்பின் பேரில் ஷபீர் என்பவர் மதனை அழைத்துச் சென்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.