×

குன்னூர் நகர மன்ற தலைவராக சுசிலா தேர்வு

 

குன்னூர் நகர மன்ற தலைவர் தேர்தலில் கவுன்சிலர் சுசிலா போட்டியின்றி ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டார்.

நீலகிரி மாவட்டம் குன்னூர் நகராட்சியில் மொத்தம் 30 வார்டுகள் உள்ளது. குன்னூர் நகர மன்ற தலைவராக திமுகவை சேர்ந்த ஷீலா கேத்ரின் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உயிரிழந்த நிலையில்  தலைவர் பொருப்பில் துணை தலைவர் வாசிம் ராஜா இருந்து கூட்டங்களை நடத்தி வந்தார். இந்த நிலையில்  குன்னூர் நகர மன்ற தலைவர் தேர்தல் நடைபெற்றது.  வேட்பாளராக 16  வது வார்டு கவுன்சிலர் எம். சுசிலா வை திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் அறிவித்தார்.

இந்த நிலையில் இன்று நடைபெற்ற தேர்தலில் சுசிலா போட்டியின்றி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கு நகராட்சி ஆணையாளர் சசிகலா பதவியேற்று வைத்தார். மேலும் அவருக்கு நகர மன்ற உறுப்பினர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.