20 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் திருமணம் செய்துகொண்ட சூர்யா- ஜோதிகா
சூர்யா-ஜோதிகா காதல் திருமணம் செய்து வெற்றிகரமாக வாழ்ந்து இருபதாவது வருடத்தை சிறப்பாக கொண்டாடியுள்ளனர்.
நடிகர் சூர்யா மற்றும் நடிகை ஜோதிகா தம்பதியினர் தங்களது 20-வது திருமண ஆண்டைக் கொண்டாடும் வகையில், நெருங்கிய குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் கிறிஸ்துவ முறைப்படி மீண்டும் திருமண உறுதிமொழிகளை (Wedding Vows) ஏற்று தங்களது திருமண பந்தத்தைப் புதுப்பித்துக் கொண்டனர். திரையுலகின் மிகவும் விரும்பப்படும் நட்சத்திர ஜோடிகளான இவர்கள், பாரம்பரிய கிறிஸ்துவ திருமண ஆடைகளில் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட மேடையில் மோதிரங்களை மாற்றிக் கொண்டு இனிமையான முறையில் இந்நிகழ்வைக் கொண்டாடியுள்ளனர். இவர்களின் காதல் மற்றும் புரிதலைப் போற்றும் வகையில் அமைந்த இந்த நெகிழ்ச்சியான நிகழ்வின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி ரசிகர்களின் மனங்களை வென்று வாழ்த்துகளைக் குவித்து வருகிறது. சூர்யா - ஜோதிகாவின் '20 YEARS OF LOVE & WAR' காணொலி இன்ஸ்டாகிராமில் 3.3 மில்லியன் Likes-களை கடந்துள்ளது.