×

#BREAKING கட்டுப்பாடுகளுடன் சுருக்குமடி வலைக்கு அனுமதி

 

கட்டுப்பாடுகளுடன் சுருக்குமடி வலையை பயன்படுத்த உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட சுருக்குமடி, இரட்டைமடி, சுத்து வலை, பேந்த வலை போன்றவை பயன்படுத்தக்கூடாது. அனுமதிக்கப்பட்ட தளத்தில் மட்டுமே மீன்பிடிக்க வேண்டும்; ஆற்று முகத்துவாரத்தில் மீன்பிடிக்கக் கூடாது. இயந்திர மயமாக்கப்பட்ட மீன்பிடி விசைப் பலகை கொண்டு மீன்பிடித் தொழிலில் ஈடுபடக்கூடாது என விதிகள் உள்ளன . 24 அடி கொண்ட விசைப்படகுகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்பது உட்பட 21 விதிகள் சட்டத்தில் உள்ளன.மீனவர்களில் ஒருபிரிவினர் சுருக்கு மடி வலைக்கு தடைவிதி கோரியும், ஒருபிரிவினர் சுருக்கு மடி வலையை பயன்படுத்த அனுமதிக்க கோரியும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன.

இந்நிலையில் சுருக்கு மடி வலைகளை பயன்படுத்த உச்சநீதிமன்றம் இடைக்கால அனுமதி வழங்கியுள்ளது.  12 கடல் மைலுக்கு அப்பால் சுருக்கு மடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடிக்கலாம். திங்கள், வியாழன் என வாரத்தில் 2 நாட்கள் மட்டும் சுருக்குமடி வலையை பயன்படுத்த அனுமதி வழங்கப்படுவதாக உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. அத்துடன் மீன்வளத்துறையில் பதிவு செய்யப்பட்ட படகுகள் மட்டுமே சுருக்குமடி வலைகளை பயன்படுத்த வேண்டும் என்றும் சுருக்கு மடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடிக்க கூடாது என்ற தமிழ்நாடு அரசின் ஆணைக்கு இடைக்கால தடை கோரிய வழக்கில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.