RTO அலுவலகங்களில் அதிரடி ரெய்டு- ரூ.37 லட்சம் பறிமுதல்
Jun 18, 2026, 21:36 IST
தமிழகம் முழுவதும் வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய அதிரடி சோதனையில் ரூ.37 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் 40 வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனையில் ஈடுபட்டது. மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம், இடைத்தரகர்களாக செயல்பட்ட ஓட்டுநர் பயிற்சி பள்ளிகளிலும் சோதனை நடத்தப்பட்டது. இந்த திடீர் சோதனை முடிவில் கணக்கில் வராத ரூ.31.85 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் ரூ.5.95 லட்சம் ஜிபே பரிவர்த்தனைகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இடைத்தரகர்கள் மூலம் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை நடைபெற்றதாகவும் புகார் எழுந்துள்ளது.