கல்வி நிதியை விடுவிக்க கோரி தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கு : விசாரணைக்கு பட்டியலிட்ட சுப்ரீம் கோர்ட்..!!
மத்திய அரசு கல்வி நிதியை விடுவிக்க கோரி தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கு நாளை மறுநாள் உச்ச நீதிமன்றம் விசாரிக்கிறது.
மத்திய அரசு வழங்க வேண்டிய 2151.59 கோடி கல்வி நிதியும், அதற்கான ஆறு சதவீத வட்டி 139.70 கோடியும் சேர்த்து 2291 கோடி ரூபாய் வழங்க உத்தரவிட வேண்டும் என்று தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் கடந்த மாதம் மனு தாக்கல் செய்து உள்ளது. இந்த வழக்கை அவசரமாக விசாரணைக்கு எடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் இன்று தமிழ்நாடு அரசு சார்பில் முறையீடு செய்யப்பட்டது.
தமிழக அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் வில்சன் ஆஜராகி , “ ஜூன் 3 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. கடந்த ஓராண்டாக ஒன்றிய அரசு நிதி வழங்காதால் 48 லட்சம் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் ” என்று உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தார். இது தொடர்பாக தமிழக அரசு தாக்கல் செய்யதுள்ள வழக்கை அவசரமாக விசாரிக்க வேண்டும் என்று முறையீடு செய்திருந்தார். தமிழ்நாடு அரசு தொடர்ந்துள்ள வழக்கை அவசரமாக விசாரிக்க வேண்டுமென்று உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் கோரிக்கை வைத்திருந்த நிலையில் இதை ஏற்றுக்கொண்டு நாளை மறுநாள் விசாரணை நடைபெறும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மற்றும் நீதிபதி கே வினோத் சந்திரன் அமர்வில் இந்த விளக்கு விசாரணைக்காக பட்டியலிடப்பட்டுள்ளது.