☰
×

தீபத் தூணில் தீபமேற்ற உச்சநீதிமன்றம் உத்தரவு - முதல்வர் விஜய் ஆலோசனை

 

திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத் தூணில் தீபமேற்ற உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் முதலமைச்சர் விஜய் ஆலோசனை நடத்திவருகிறார். 

திருப்பரங்குன்றம் மலை கல் தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தும், அங்கு தீபம் ஏற்றப்படாத விவகாரம் தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் இன்று விசாரணைக்கு வந்தன. அப்போது, தீபத்தூணில் நாளை தீபம் ஏற்ற உத்தரவிட வேண்டும் என்று மத்திய தொல்லியல் துறை சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனையடுத்து கார்த்திகை மாதம் முடிவதற்குள்ளாகவே திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றியாக வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு குறித்து முதலமைச்சர் ஜோசப் விஜய் ஆலோசனை நடத்திவருகிறார்.  சென்னையின் கிரீன்வேஸ் சாலையில் அமைந்துள்ள முதலமைச்சரின் முகாம் அலுவலகத்தில் நடைபெற்றுவரும் இந்தக் கூட்டத்தில், அமைச்சர்களும், மூத்த அரசு மற்றும் காவல் துறை அதிகாரிகளும் கலந்துகொண்டுள்ளனர்.  அமைச்சர் நிர்மல் குமார் மற்றும் தலைமை செயலாளரும் இக்கூட்டத்தில் காலந்துகொண்டுள்ளனர்.