#BREAKING தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்துவிட கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்துவிட கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
காவிரி நீர் மேலாண்மை ஆணைய உத்தரவின்படி காவிரியில் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்துவிட கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கு விசாரணையில், “மழைநீரை முழுமையாக தேக்க முடியாது என்பதால், நீரை கர்நாடகம் திறந்து விட்டுள்ளது” என கருத்து தெரிவித்துள்ள நீதிபதி, காவிரி ஆணையத்தின் உத்தரவுப்படி தமிழகத்திற்கான நீரை கர்நாடக அரசு திறக்காதது ஏன்? எனக் கேள்வி எழுப்பினார்.
தேவைக்கு அதிகமான நீரை தமிழகத்திற்கு திறந்துவிட்டிருப்பதாக கர்நாடகா வாதிட்டதற்கு, "கடவுள் கொடுத்த மழையை முழுமையாக தேக்கி வைக்க முடியாது, அதனால் தானே திறந்து விட்டீர்கள்” எனக் கூறிய நீதிபதி காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவு படி, தமிழகத்திற்கு அடுத்த 15 நாட்களுக்கு வினாடிக்கு 12 ஆயிரம் கன அடி நீர் திறக்க வேண்டும் என உத்தரவிட்டது. நீர் திறப்பு குறித்த தரவுகளை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, 24ம் தேதிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.