×

ஆளுநரின் செயலாருக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!!

 

சட்ட மசோதாவை மீண்டும் பேரவை நிறைவேற்றி அனுப்பினால், அதற்கு ஆளுநர் ஒப்புதல் வழங்க வேண்டும் என்று  உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளார்.

ஆளுநர் ஆர் என் ரவிக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு தொடர்ந்துள்ளது.  அரசு நிறைவேற்றி அனுப்பிய சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை என புகார் கூறியுள்ளது. மேலும் குறிப்பிட்ட காலம் வரம்புக்குள் மசோதாக்கள் ஒப்புதல் வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் குறிப்பிட்டுள்ளது. சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஒப்புதலுக்காக அனுப்பப்பட்ட மசோதாக்கள் மற்றும் அரசு உத்தரவுகளை நிறைவேற்றுவதில் காலதாமதம் செய்வதாக ஆளுநர் ரவிக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மனு தாக்கல் செய்துள்ளது.

இந்நிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்குகளில் பதிலளிக்கும்படி ஆளுநரின் செயலாளர், உள்துறை அமைச்சகத்திற்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அரசியல் சட்டப்பிரிவு 200ன் படி, சட்டமன்றம் நிறைவேற்றி அனுப்பிய மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கவில்லை என்றால், அதனை மறுபரிசீலனை செய்யச் சொல்லி 'கூடிய விரைவில்' பேரவைக்கு ஆளுநர் திருப்பி அனுப்ப வேண்டும். அதே சட்ட மசோதாவை மீண்டும் பேரவை நிறைவேற்றி அனுப்பினால், அதற்கு ஆளுநர் ஒப்புதல் வழங்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.