×

இளையராஜாவின் மனுவை தள்ளுபடி செய்த சுப்ரீம் கோர்ட்..!!

 


 காப்புரிமை விவகாரத்தில் இசையமைப்பாளர் இளையராஜா தொடர்ந்த மனு தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  


பிரபல சோனி மியூசிக் எண்டர்டெயின்மெண்ட்  இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம், இசைஞானி இளையராஜாவின் மியூசிக் மேனேஜ்மெண்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு எதிராக  மும்பை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது. ஆடியோ பதிவுகளில் சோனி நிறுவனத்தின்  பதிப்புரிமையை இளையராஜாவிம் நிறுவனம் மீறியதாக அந்நிறுவனம் குற்றம் சாட்டியிருந்தது. மேலும், தங்களது நிறுவனத்திற்குச் சொந்தமான 536 ஆல்பங்களில் 22 ஆல்பங்கள் பொதுமக்களுக்கு கிடைத்ததாகவும், இதன்மூலம் சோனியின் பதிப்புரிமை மீறப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தது.   

ஆபால் ஒளிபரப்பப்பட்ட படைப்புகளின் உரிமை தங்களுக்கும் இருப்பதாகக் கூறி இளையராஜாவின் நிறுவனம் தொடர்ந்து பொதுமக்களுக்கு ஒலிபரப்பிக்கொண்டு வந்தது.  இதனையடுத்து பதிப்புரிமையை மீறியதற்காக இழப்பீடு கோரி, இளையராஜாவின் நிறுவனத்திற்கு எதிராக சோனி மீயூசிக் நிறுவனம் மீண்டும் வழக்கை தாக்கல் செய்தது. இதனிடையே இந்த வழக்கை சென்னைக்கு மாற்றக்கோரி இளையராஜா உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை இன்று விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வு, இளையராஜாவின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.