“நான் பேசினாலே பிரச்னைதான்”- ரஜினிகாந்த்
‘நான் பேச ஆரம்பித்தாலே பிரச்சனையாக மாறுது; அமைதியாக இருந்தால் ‘ஏன் பேசவில்லை?’ என்று கேட்கிறார்கள்; பேசினால் 'இதை ஏன் பேசினார்?' என விமர்சிப்பார்கள்’ என நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.
தலைவர்173 பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீட்டு விழாவில் உரையாற்றிய ரஜினிகாந்த், “என்னை பற்றி ஏதாவது பேசிக்கொண்டே இருப்பார்கள், கிளப்பி கொண்டே இருப்பார்கள். நான் பேச ஆரம்பித்தால் அது ஒரு பிரச்சனையாக மாறிவிடும். சும்மா இருந்தால் இவர் என்ன பேசவே மாட்டிங்குறார், வாய்ல என்ன கொழுக்கட்டையா வச்சிருக்கார் என கிண்டல் செய்வார்கள். நான் பேசினால், 'இதை ஏன் பேசினார்?' என்று விமர்சிப்பார்கள். இவர் இப்படி பேசியிருக்கக்கூடாது என மற்றவர்கள் சொல்வார்கள். ரொம்ப நாள் கழித்து நான் தெரிந்துகொண்டது என்னவென்றால், நம்மை புடிக்காதவங்களுக்கு நம் எது பேசினாலும், எது செஞ்சாலும் புடிக்காது. நம்மள புடிச்சவங்களுக்கு நம்ம எது செஞ்சாலும், எது பண்ணாலும் புடிக்கும் என நினைக்கிறது முட்டாள்தனம். ஆகவே ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். வெறுப்பவர்கள் எப்போதும் வெறுப்பையே பரப்புவார்கள். அதேபோல், நம்மை நேசிப்பவர்கள் எல்லா நேரங்களிலும் அன்பை மட்டுமே வெளிப்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது” என்றார்.
Thalaivar Speech 💙💙💙@rajinikanth #Rajinikanth #Dharman pic.twitter.com/eZfbE2myLW
— 𝐌𝐚𝐧𝐨 (@rajini_mano) June 24, 2026
நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் தலைவர்173 பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் படத்தின் பெயர் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. தர்மன் என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் சார்பில் கமல்ஹாசன் தயாரிக்க இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இப்படத்தை இயக்குகிறார்.