×

ஆதாரை இலவசமாக அப்டேட் செய்ய சூப்பர் சான்ஸ்.. ஜூன் 14 கடைசி நாள்..!

 

ஆதார் கார்ட்டை 10 ஆண்களுக்கு ஒருமுறை புதுப்பிக்க வேணடும் என இந்திய தனித்துவ அடையாள ஆணையம் கூறுகிறது. 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிப்பது உங்களது விவரங்கள் எந்த ஒரு இடத்தில் பிழை என்று நீக்கப்படாமல் இருக்கும். இதற்காக ஆதார் கார்டு வைத்திருக்கும் அனைவரும்  அதில் உள்ள பயோமெட்ரிக் விவரங்கள் உள்ளிட்ட விவரங்களை புதுப்பிப்பது அவசியம். 

இந்த நிலையில், இந்திய தனித்துவ அடையாள ஆணையம் முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது, ஜூன் 14ஆம் தேதி ஆதார் கார்டில் உள்ள விவரங்களை இலவசமாக புதுப்பித்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்கள் தொலைபேசி அல்லது மடிக்கணினியை பயன்படுத்தியே நீங்கள் ஆதார் கார்டில் உள்ள விவரங்களை இலவசமாக புதுப்பித்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஆதாரை இலவசமாக புதுப்பிப்பது எப்படி?

முதலில் myaadhaar என்ற இணையதளத்திற்கு முதலில் செல்ல  வேண்டும். பிறகு, உங்கள் ஆதார் எண்ணையும் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணையும் உள்ளிட வேண்டும்.  இதன்பிறகு, நீங்கள் ஆதார் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணிற்கு உங்களுக்கு otp வரும்.  அதனை உள்ளிட்டு நுழைய வேண்டும்.  அதில், முகப்பு பக்கத்தில் document update என்ற ஆப்ஷனை கிளிக் செய்து பார்த்தால் ஜூன் 14ஆம் தேதி வரை ஆவணங்களை அப்டேட் செய்து கொள்ளலா  என்று இருக்கும்.  

அடுத்த பக்கத்தில் உங்கள் பெயர், பாலினம், பிறந்த தேதி, முகவரி போன்ற  விவரங்களை உள்ளிட வேண்டும். அனைத்து விவரங்களு சரியாக இருப்பதை உறுதி செய்வதற்கான ஆப்ஷன் தோன்றும். அதனை கிளிக் செய்து, சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். அதாவது,  பான் அட்டை, ரேஷன் அட்டை போன்றவற்றை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.  ஆவணங்களை பதிவேற்றியவுடன் submit என்பதை கிளிக் செய்தால், உங்கள் ஆதார் புதுப்பிக்கப்படும்.  இறுதியாக நீங்கள் உங்கள் srn சேவை கோரிக்கை எண்ணை குறித்துக் கொள்ளுங்கள். இது உங்கள் ஆதார் நிலையை சரிபார்க்க உதவும்.

கவனிக்க வேண்டிய விஷயங்கள்

ஆதார் எண்ணை புதுப்பிக்கும்போது, பதவிறேப்பப்பட வேண்டிய ஆவணத்தின நகல் தெளிவாக இருக்க வேண்டும். மேலும், அதில் இருக்கும் எந்த தகவலுக்கு மங்கலாக தெரியக் கூடாது. நீங்கள் பதிவேற்றும் ஆவணங்களில்  உள்ள பெயர், ஆதார் அட்டையில் உள்ள பெயருடன்  பொருந்த வேண்டும். எழுத்துப்பிழை இருந்தால் அதனை முதலில் சரிசெய்ய வேண்டும். பதிவேறப்பப்படும் ஆவணத்தின் அளவு 2MBக்கு மிகாமல் இருக்க வேண்டும். மேலும், இவை PDF வடிவங்களில்  இருக்க வேண்டும். அதனை மட்டுமே ஆதார் ஏற்கும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.  உறவுமுறைச் சான்றுக்கு ரேஷன் கார்டு, திருமண சான்றிதழ், பாஸ்போர்ட் போன்றவற்றை சமர்ப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

என்னென்ன ஆவணங்கள் தேவை

ஆதார் அட்டையில் உள்ள பெயரை திருத்தவோ, மாற்றவோ விரும்பினால் நீங்கள் பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், திருமண சான்றிதழ் போன்றவற்றை சமர்ப்பிக்கலாம். பிறந்த தேதியை மாற்ற 10,12ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்கள், அசல் பான் அட்டை, பட்டப்படிப்பு சான்றிதழ், பாஸ்போர்ட் போன்றவற்றையும் சமர்ப்பிக்கலாம்.  முகவரியை அப்டேட் செய்ய பாஸ்போர்ட், வங்கி கணக்கு புத்தகம், ரேஷன் கார்டு, வாக்காளர் அட்டை, ஓட்டுநர் உரிமம், மின்சார கட்டண ரசீது, கேஸ் பில்,  தண்ணீர் கட்டண ரசீது, தொலைபேசி நிலக்கோடு பில், வாடகை ஒப்பந்தம் மூலம் நீங்கள் ஆதார் முகவரியை புதுப்பிக்கலாம்.

எதற்கெல்லாம் இலவசம்?

5 முதல் 7 வயதுக்குட்பட்ட குழந்தைகள் இலவசமாக ஆதாரை புதுப்பித்துக் கொள்ளலாம். 15 முதல் 17 வயதுக்குட்பட்ட குழந்தைகளும் தங்கள் ஆதாரை இரண்டாவது முறை புதுப்பிக்க  இலவசமாக செய்யலாம்.  5 முதல் 17 வயதுக்குட்பட்டவர்கள் செப்டம்பர் 30ஆம் தேதி வரை இலவசமாக செய்து கொள்ளலாம்.  ஒரே நேரத்தில் பெயர், பாலினம், பிறந்த தேதி, முகவரி, மொபைல் எண், இமெயில் முகவரி போன்றவற்றை ஒரே நேரத்தில் செய்தால் இலவசம் என்றும்  தனித்தனியாக செய்தால் ரூ.75 கட்டணம் செலுத்த வேண்டும். மேலும், ஜூன் 14ம் தேதி வரை ஆதார் விவரங்களுக்கான ஆவணங்களை இலவசமாக சமர்ப்பித்துக் கொள்ளலாம்.  ஜூன் 14ஆம தேதிக்கு பிறகு  ரூ.75 கட்டணம் செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.