சுந்தர்.சி மற்றும் குஷ்புவின் சொத்து மதிப்பு..! கையிருப்பு வெறும் 50 ஆயிரம் தான்.. !!
Apr 5, 2026, 07:20 IST
மதுரை தெற்கு தொகுதியில் போட்டியிடும் சுந்தர் சி தனது சொத்து விவரங்களை வெளியிட்டுள்ளார். அதில், சுந்தர் சி பெயரில் 2.97 கோடி மதிப்பில் சொத்துக்களும் குஷ்பு பெயரில் 6.06 கோடி மதிப்பில் அசையும் சொத்துகளும் உள்ளன.
சுந்தர் சி யிடம் ரூபாய் 50 ஆயிரத்து 600 கையிருப்பும், குஷ்புவிடம் ரூபாய் 30,000 கையிருப்பும் உள்ளதாம். சுந்தர்சியிடம் மனை நிலங்களாக மூன்று இடங்களும் குஷ்பூவுடன் மனை நிலங்களாக ஆறு இடங்களும் உள்ளன. சுந்தர் சியிடம் அசையா சொத்துக்கள் மதிப்பு 20 புள்ளி 80 கோடியும். குஷ்புவிடம் அசையா சொத்துக்களின் மதிப்பு 16.79 கோடியும் உள்ளனவாம்.