×

சன் டிவி நடிகை தேவிபிரியாவின் கார் விபத்து- ஓட்டுநர் உயிரிழப்பு

 

சன் டிவி நடிகை தேவிபிரியாவின் கார் விபத்து- ஓட்டுநர் உயிரிழப்புபெரம்பலூர் அருகே சென்னை-திருச்சி NH-ல் பஞ்சராகி நின்ற சின்னத்திரை நடிகை தேவி பிரியாவின் காரின் மீது மற்றொரு வாகனம் மோதி விபத்துக்குள்ளானது.


சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும்  ரஞ்சிதமே, புதுவசந்தம்  உள்ளிட்ட பல்வேறு தொடர்களில் நடித்து  பார்வையாளர்களிடம் வரவேற்பை பெற்ற சின்னத்திரை நடிகை  தேவிப்பிரியா. இவர் தேனியில் நடைபெற இருக்கும் படப்பிடிப்பு ஒன்றில் பங்கேற்க நேற்று  இரவு சென்னையிலிருந்து ஒரு காரில் புறப்பட்டு வந்துள்ளார் . இந்நிலையில் நேற்று நள்ளிரவு சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் மாவட்டம் பாடாலூர் அருகேயுள்ள திருவளக்குறிச்சி பிரிவு சாலை பகுதியில் இவர்களது கார் பஞ்சாரகி உள்ளது. 

இதையடுத்து காரின் ஓட்டுநரான சென்னையை சேர்ந்த   முத்து கணேஷ்(38) , மற்றும்  தேனியை சேர்ந்த உதவி ஓட்டுனர்  திவாகர் (36). இருவரும் கீழே இறங்கி பஞ்சரான காரின் சக்கரத்தை மாற்றிக்கொண்டிருந்ததாக தெரிகிறது. தே விப்பிரியா காருக்குள் அமர்ந்திருந்த நிலையில் சென்னையிலிருந்து  வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று இவர்களது கார் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் தூக்கி வீசப்பட்ட ஓட்டுநர் முத்து கணேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் உதவியாளர் திவாகருக்கு லேசான காயம்  ஏற்பட்டுள்ளது இந்த விபத்தில் காருக்குள் இருந்த நடிகை தேவிப்பிரியா அதிருஷ்ட வசமாக உயிர்தப்பியுள்ளார். விபத்து குறித்து தகவலறிந்து  சம்பவ இடத்திற்கு சென்ற பாடாலூர் போலீசார் இறந்தவரின் உடலை மீட்டு  உடற்கூறு ஆய்வுக்காக அரசுமருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மே லும் விபத்தில் காயமுற்ற திவாகர் தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.  தொடர்ந்து விபத்தில் இறந்த கார் ஓட்டுனரின் உடல் உடற்கூறு ஆய்வுக்கு பின் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு சென்னை கொண்டு செல்லப்பட்டது.