கோடை வெயில் - பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல்
Apr 28, 2026, 18:32 IST
கோடை வெயில் வாட்டிவதைத்து வரும் நிலையில், மாணவர்கள், பெற்றோர், முதியோர் ஆசிரியர்களுக்கு சில முக்கிய அறிவுறுத்தல்களை பள்ளிக்கல்வித்துறை வழங்கியுள்ளது.
அதன்படி, மாணவர்கள், பெற்றோர், முதியோர் ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல். பகல் 12 மணி முதல் 3 மணி வரை திறந்த வெளியில் வகுப்புகளை நடத்தக்கூடாது. மாணவர்கள் தண்ணீர் அருந்துவது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். வெயிலின்போது திறந்த வெளியில் உடற்பயிற்சி வகுப்புகளை நடத்தக்கூடாது. பள்ளிகளில் போதுமான ஓ.ஆர்.எஸ். கரைசல் இருக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.