×

"பொங்கல் பரிசில் கரும்பு இடம்பெறும்" - அரசு உடனடி நடவடிக்கை!

 

தமிழ்நாட்டில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு சிறப்பு தொகுப்பு வழங்கப்படும். இதில் முதன்மைப் பொருளாக கரும்பு இடம்பெறும். 2016ஆம் ஆண்டிலிருந்து பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு வழங்கப்பட்டு வந்தது. ஆனால் இன்று பொங்கல் பரிசு குறித்து அறிவிப்பு வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின், கரும்பை விட்டுவிட்டார். 

அதில் பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய், மஞ்சள் தூள் உள்ளிட்ட 20 பொருட்கள் வழங்கப்படும் என்றார். கரும்பு இடம்பெறாமல் போனது கரும்பு விவசாயிகளிடம் அதிருப்தியையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியது. இதற்கு அதிருப்தி தெரிவித்த விவசாயிகள், "பொங்கல் தொகுப்பை நம்பி அரசு கொள்முதல் செய்ய ஏதுவாக கரும்பு கூடுதலாக நடவு செய்யப்பட்டுள்ளது.

இதனால் 5 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்ட கரும்புகள் முற்றிலும் நஷ்டத்தைச் சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே விவசாயிகளின் நிலைமையைக் கருத்தில் கொண்டு பரிசு தொகுப்பில் கரும்பை இணைக்க வேண்டும்'' என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். கோரிக்கையை அடுத்து உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, பொங்கல் தொகுப்பில் முழுக்கரும்பு சேர்க்கப்படும் என அறிவித்துள்ளார்.