#BREAKING முதல் 6 மாதம் வரை குழந்தைகளுக்கு சர்க்கரைக்கு தடை
Oct 19, 2026, 18:33 IST
குழந்தைகளுக்கான உணவில் சர்க்கரை சேர்க்கத் தடை விதிக்க உணவு பாதுகாப்பு ஆணையம் பரிந்துரைத்துள்ளது.
6 மாதங்கள் வரையிலான குழந்தைகளுக்கான உணவுப் பொருட்களில் சுக்ரோஸ், பிரக்டோஸ் ஆகிய சர்க்கரை வகைகளைச் சேர்ப்பதற்குத் தடை விதிக்க FSSAI பரிந்துரைத்துள்ளது. இந்த வரைவு விதிகள் குறித்து கருத்து தெரிவிக்க 60 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு இளம் வயதிலேயே உடல் பருமன் மற்றும் பிற உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படுவதைத் தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.