திடீரென வீடியோ கால் பேசிய முதல்வர்! மக்கள் நெகிழ்ச்சி
குமரி மாவட்டத்தில் நடைப்பெற்று வந்த ஓரணி நிகழ்வில் திடிரென செல்போனில் விடியோ கால் மூலமாக நேரலையில் வந்து பொதுமக்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துரையானார்.
திமுக கட்சி தலைவரும் முதல்வருமான திரு மு.க. ஸ்டாலின் அவர்கள் ஓரணியில் தமிழ்நாடு என்ற நிகழ்வை தொடங்கி தமிழ்நாடு முழுவதும் நடத்தி வரும் நிலையில் அதன் ஒரு பகுதியாக குமரி கிழக்கு மாவட்டம் நாகர்கோவில் மாநகரம் 4-வது வார்டு நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி 13-வது பூத் பகுதியில் ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்கையின் போது கழக தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க ஸ்டாலின், நாகர்கோவில் மாநகராட்சி மேயரும் குமரி கிழக்கு மாவட்ட செயலாளருமான திரு.ரெ.மகேஷ் அவர்களின் அலைபேசி வாயிலாகவும் காணொளி வாயிலாக பொது மக்களிடம் நலம் விசாரித்து நலதிட்டங்கள் குறித்து உரையாடினார். கழக தலைவரிடம் வாழ்நாள் முழுவதும் உங்கள் ஆட்சி நடைபெற வேண்டும் என்றும் பொதுமக்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.
ஓரணியில் தமிழ்நாடு பரப்புரையில் ஈடுபட்டிருந்த திமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களுடன் வீடியோ காலில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "காஃபி-லாம் கொடுக்குறாங்களா? தெரிஞ்சிருந்தா நானும் வந்திருப்பனே.." என பொதுமக்களிடம் கூறினார். அதற்கு மக்கள், "எப்பவுமே நீங்கதான் சார் ஆட்சிக்கு வரணும்..." என நெகிழ்ச்சி தெரிவித்தனர்.