குழந்தை கடத்தல் என பரவிய தகவலில் திடீர் திருப்பம்
Jun 12, 2026, 20:55 IST
சென்னை வேளச்சேரியில் பட்டப்பகலில் பாட்டியின் கண்முன்பே 4 வயது பேத்தியை காரில் கடத்தியதாக புகார் எழுந்தது.
சென்னை வேளச்சேரியில் பட்டப்பகலில் பாட்டியின் கண்முன்பே 4 வயது பேத்தியை காரில் 4 பேர் கொண்ட கும்பல் கடத்தியதாக புகார் எழுந்தது. இதனையடுத்து சிசிடிவி காட்சிகளை வைத்து ஆதம்பாக்கம் போலீசார் மூதாட்டி சாந்தியிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் குடும்பத்தகராறில் மருமகளே குழந்தை கடத்தியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
செல்போனில் மூழ்கியதால் கணவன், மனைவி இடையே பிரச்சினை ஏற்பட்டதும், குடும்ப சண்டையில் பாட்டியிடம் இருந்த 4 வயது குழந்தையை திருநங்கைகளுடன் வந்து குழந்தையை தாய் தூக்கிச் சென்றதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. கடத்தலில் ஈடுபட்ட பெண்ணை தொடர்புகொண்ட போலீசார், குழந்தையுடன் நேரில் ஆஜராக உத்தரவிட்டுள்ளனர்.