×

லலிதா ஜூவல்லரியில் திடீர் ஐ.டி ரெய்டு!

கடந்த 2019ஆம் ஆண்டு திருச்சி லலிதா ஜூவல்லரியில் 13 கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. அந்த வழக்கின் குற்றவாளி முருகன் பல இடங்களில் கொள்ளையடிதிருப்பது விசாரணையில் அம்பலமானது. பின்னர், குற்றவாளி தாமாக முன்வந்து போலீசில் சரண் அடைந்தார். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு, சிறுக சிறுக பதுக்கி வைக்கப்பட்டிருந்த தங்க நகைகள் மீட்கப்பட்டது. இந்த வழக்கில் சிக்கிய கொள்ளையன் முருகன், அண்மையில் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். முருகனுடன் கைது செய்யப்பட்ட 5 பேரும் தற்போது
 

கடந்த 2019ஆம் ஆண்டு திருச்சி லலிதா ஜூவல்லரியில் 13 கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. அந்த வழக்கின் குற்றவாளி முருகன் பல இடங்களில் கொள்ளையடிதிருப்பது விசாரணையில் அம்பலமானது. பின்னர், குற்றவாளி தாமாக முன்வந்து போலீசில் சரண் அடைந்தார். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு, சிறுக சிறுக பதுக்கி வைக்கப்பட்டிருந்த தங்க நகைகள் மீட்கப்பட்டது.

இந்த வழக்கில் சிக்கிய கொள்ளையன் முருகன், அண்மையில் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். முருகனுடன் கைது செய்யப்பட்ட 5 பேரும் தற்போது சிறையில் இருக்கின்றனர். முருகனின் மறைவுக்கு பிறகும் இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது. இக்கொள்ளை சம்பவத்தால் பெயர் போன நகைக்கடையான லலிதா ஜூவல்லரிக்கு சொந்தமான இடங்களில் தமிழகம் முழுவதும் இன்று திடீர் ஐ.டி.ரெய்டு நடத்தப்படுகிறது.

லலிதா ஜூவல்லரியில் வரி ஏய்ப்பு நடந்திருப்பதாக கிடைத்த தகவலையடுத்து ஒரே நேரத்தில், அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சோதனையின் முடிவில் ரெய்டு குறித்த தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.