#BREAKING சென்னையில் 2 சுங்கச்சாவடிகளில் கட்டணம் திடீர் உயர்வு
சென்னையில் 2 சுங்கச்சாவடிகளில் கட்டணம் திடீரென உயர்த்தப்பட்டிருப்பது வாகன ஓட்டிகளிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் 2 சுங்கச்சாவடிகளில் கட்டணம் திடீரென உயர்த்தப்பட்டுள்ளத். அதன்படி வானகரம், சூரப்பட்டு சுங்கச்சாவடிகளில் இன்று நள்ளிரவு முதல் ரூ.5 கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. கார், ஜீப்பில் ஒரு முறை பயணிப்பதற்கான சுங்கக்கட்டணம் ரூ.55ஆக அதிகரித்துள்ளது. 4 மாதங்களில் 2வது முறையாக சுங்கக்கட்டணம் உயர்த்தப்பட்டிருப்பது வாகன ஓட்டிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதேபோல் தமிழகத்தில் பல சுங்கச்சாவடிகளில் மீண்டும் கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது. சூரப்பட்டில் கார், ஜீப்பில் ஒரு முறை பயணிப்பதற்கான சுங்ககட்டணம் ரூ.75 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் ஏப்ரல், செப்டம்பரில் சுங்கக்கட்டணம் உயர்த்தப்படுவது வழக்கம். ஆனால் வழக்கத்திற்கு மாறாக எவ்வித முன்னறிவிப்புமின்றி, தற்போது சுங்கக்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.