☰
×

விண்ணை முட்டும் அரிசி விலை! தவிக்கும் சாமானியர்கள்
 

 

தமிழகத்தில் ஒரு மூட்டை அரிசி ரூ.300 முதல் ரூ.600 வரை உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் ஒரு மூட்டை அரிசி ரூ.300 முதல் ரூ.600 வரை உயர்ந்துள்ளது. கடந்த 46 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு அரிசி விலை உயர்ந்துள்ளதாக அரிசி ஆலை ஊழியர்கள் தெரிவிக்கின்றனர். தமிழ்நாட்டில் 1 லட்சம் அரிசி ஆலைகள் செயல்பட்டு வந்த நிலையில் தற்போது 25 ஆயிரம் அரிசி ஆலைகள் மட்டுமே செயல்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. நெல் வரத்து குறைந்த‌தால் தஞ்சையில் பல அரிசி ஆலைகள் மூடப்பட்டுள்ளன. டெல்டா மாவட்ட மக்கள் கூட வெளிமாநில அரிசியையே நம்பியுள்ள சூழல் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் மக்களின் தேவையை பூர்த்தி செய்யும் அளவுக்கு நெல் உற்பத்தி இல்லாததால் வெளிமாநிலங்களில் இருந்து அரிசியை எதிர்பார்த்து காத்திருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே அரிசி ஏற்றுமதியும் அதிகரித்துள்ளதால் கடந்த 4 மாதங்களில் அரிசி விலை 20 முதல் 25 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.

சேலம் செவ்வாய்பேட்டை மார்க்கெட்டில் ஒரு கிலோ அரிசியின் விலை ரூ. 10 முதல் ரூ. 20 வரையும், மொத்த விலையில் மூட்டைக்கு ரூ. 300 முதல் ரூ.500 வரையும் விலை உயர்ந்துள்ளதாகவும், அதேபோல் கடந்த மாதம் கிலோ ரூ.120க்கு விற்பனை செய்யப்பட்ட துவரம் பருப்பு தற்போது கிலோவுக்கு 30 அதிகரித்து கிலோ ரூ.150 ஆகவும், பாசிப்பருப்பு கிலோ ரூ. 10, கடலைப்பருப்பு கிலோ ரூ. 25, உளுந்தம் பருப்பு கிலோ ரூ.30 வரை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தகவல். வடமாநிலங்களில் போதுமான மழை இல்லாததால் உணவு தானியங்களின் உற்பத்தி பாதிக்கப்பட்டதால் விலை உயர்ந்துள்ளது.