×

‘கையில் அடிபட்ட சிறுமி’ திடீர் மரணம் : தவறான சிகிச்சையா? கோவையில் தொடரும் அவலம்!

கோவை சிங்காநல்லூர் பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன். இவரது ஆறு வயது மகள் ஹேமர்னா. உடல்நிலை சரியில்லாத கார்த்திகேயன் தனது குடும்பத்துடன் கடந்த வாரம் மைசூருக்கு சென்றுள்ளார். அவர்கள் தங்கியிருந்த இடத்தில் ஹேமர்னா விளையாடிக் கொண்டிருந்த போது, அவரது கை கதவின் இடுக்கில் சிக்கியுள்ளது. காயமடைந்த சிறுமிக்கு அங்கு முதலுதவி அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து நேற்று முன்தினம் வீடு திரும்பிய கார்த்திகேயன், தனது மகளை சிங்காநல்லூரில் இருக்கும் டாக்டர் முத்தூஸ் மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். சிறுமி அனுமதிக்கப்பட்ட ஒரு சில மணி
 

கோவை சிங்காநல்லூர் பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன். இவரது ஆறு வயது மகள் ஹேமர்னா. உடல்நிலை சரியில்லாத கார்த்திகேயன் தனது குடும்பத்துடன் கடந்த வாரம் மைசூருக்கு சென்றுள்ளார். அவர்கள் தங்கியிருந்த இடத்தில் ஹேமர்னா விளையாடிக் கொண்டிருந்த போது, அவரது கை கதவின் இடுக்கில் சிக்கியுள்ளது. காயமடைந்த சிறுமிக்கு அங்கு முதலுதவி அளிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து நேற்று முன்தினம் வீடு திரும்பிய கார்த்திகேயன், தனது மகளை சிங்காநல்லூரில் இருக்கும் டாக்டர் முத்தூஸ் மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். சிறுமி அனுமதிக்கப்பட்ட ஒரு சில மணி நேரங்களிலேயே அவர் இறந்துவிட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதிர்ச்சி அடைந்த கார்த்திகேயன் கையில் காயம் அடைந்த சிறுமி எப்படி உயிரிழந்தார் என மருத்துவமனை நிர்வாகத்திடம் முறையிட்டுள்ளார். அதற்கு அங்கு இருந்த மருத்துவர்கள் முறையாக பதில் அளிக்காததால், அப்பகுதி காவல் நிலையத்தில் கார்த்திகேயன் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் போலீசார், முத்தூஸ் மருத்துவமனை நிர்வாகத்திடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அண்மையில் திருப்பூர் மாவட்டம் அனுப்பர்பாளையத்திலும் இதே போன்ற சம்பவம் அரங்கேறியது. அப்பகுதியை சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவரின் மூன்றரை வயது மகள் பிரியதர்ஷினி கையில் அடிபட்டு, டாக்டர் மூத்தூஸ் மருத்துவமனையின் வேறொரு கிளையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்தார். தவறான சிகிச்சையால் சிறுமி உயிரிழந்ததாக உறவினர்கள் குற்றஞ்சாட்டினர். இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வரும் நிலையில், தற்போது மேலும் ஒரு சிறுமி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.