☰
×

கோவையில் திடீர் பரபரப்பு! ஹிந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கார் மீது பைக் மோதி விபத்து!

 

ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் நேற்று கோவையில் உள்ள அலுவலகத்துக்கு வந்தார். அலுவலகத்தின் வெளியே நின்றிருந்த அவரது கார் மீது, ஒரு பைக் மோதியது. அங்கு நின்றிருந்த ஹிந்து முன்னணி அமைப்பினர், காட்டூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் அளித்தனர்.

போலீசார் விசாரித்தபோது, பைக்கில் வந்தது, பீஹாரைச் சேர்ந்த ஆகாஷ், விகாஷ் என தெரிந்தது. இருவரும் கோவை நஞ்சப்பா சாலையிலுள்ள முஸ்தபா என்பவரது கடையில் பணிபுரிவது தெரிந்தது. ஹிந்து முன்னணி அளித்த புகாரில் இருவர் மீதும் போலீசார், சி.எஸ்.ஆர்., பதிவு செய்தனர். இதனிடையே, ஹிந்து முன்னணி மாநில பொதுச்செயலர் கிஷோர்குமார் வெளியிட்ட அறிக்கை: காடேஸ்வரா சுப்ரமணியத்திற்கு கொலை மிரட்டல் உள்ள நிலையில், இச்சம்பவம் நடந்து உள்ளது.

இரு நாட்களுக்கு முன், திருப்பூரில் ஹிந்து முன்னணி அலுவலக மாடியில் உள்ள தண்ணீர் தொட்டி மீது, மர்ம நபர் ஒருவர் ஏறினார். இந்த தொடர் சம்பவங்களை கருத்தில் கொண்டு, தமிழக உளவுப்பிரிவும், போலீசாரும் இதன் பின்னணியில் ஏதேனும் சதி உள்ளதா என விரிவாக விசாரணை நடத்தி, குற்றவாளிகள் மீது கடும் சட்டப்பிரிவுகளில் வழக்கு பதிந்து கைது செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.