×

மெட்ரோ ரயில் சேவையில் அதிரடி மாற்றம்!

சென்னையில் காலை 5.30 மணி முதல் இரவு 9 மணி வரை மட்டுமே மெட்ரோ ரயில் இயக்கப்படும் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இன்று இரவு முதல் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வருகிறது . இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை தமிழகத்தில் ஊரடங்கு பின்பற்றப்படுகிறது. இந்த நேரங்களில் தனியார் /பொது போக்குவரத்து வாடகை ஆட்டோ ,டாக்ஸி உள்ளிட்ட வாகனங்களுக்கு அனுமதி இல்லை என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
 

சென்னையில் காலை 5.30 மணி முதல் இரவு 9 மணி வரை மட்டுமே மெட்ரோ ரயில் இயக்கப்படும் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் இன்று இரவு முதல் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வருகிறது . இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை தமிழகத்தில் ஊரடங்கு பின்பற்றப்படுகிறது. இந்த நேரங்களில் தனியார் /பொது போக்குவரத்து வாடகை ஆட்டோ ,டாக்ஸி உள்ளிட்ட வாகனங்களுக்கு அனுமதி இல்லை என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அதேசமயம் மருந்து ,பால் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் கொண்டு செல்லும் வாகனங்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது, இரவு நேர ஊரடங்கை மக்கள் முறையாக பின்பற்றி பரவலை தடுக்கும் முயற்சியில் அரசுக்கு கை கொடுக்க வேண்டுமெனவும் தமிழக அரசு மற்றும் சுகாதாரத்துறை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

இந்நிலையில் மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் , சென்னையில் காலை 5.30 மணி முதல் இரவு 9 மணி வரை மட்டுமே மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும். கூட்ட நெரிசலை தவிர்க்க கூட்ட நெரிசல் அதிகமாக உள்ள நேரங்களில் 5 நிமிடங்களுக்கு ஒரு ரயில் இயக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. அதேபோல் பயணிகள் அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிந்து பயணம் செய்ய வேண்டும் எனவும் மெட்ரோ நிர்வாகம் வலியுறுத்தியுள்ளது. கூட்ட நெரிசல் இல்லாத நேரங்களில் 10 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்.

சென்னை சென்ட்ரல், விமான நிலையம், விம்கோ நகர் உள்ளிட்ட இடங்களில் இருந்து கடைசி மெட்ரோ ரயில் இரவு 8 .55 க்கும் 9.05 மணிக்கும் இடையே ரயில் புறப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரவு 11 மணிவரை மெட்ரோ ரயில் இயக்கப்பட்ட நிலையில் இரவு ஊரடங்கு காரணமாக 9 மணிக்கு ரயில் சேவை நிறுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.