×

திருப்பூர்- மின்தடையால் அடுத்தடுத்து உயிரிழப்பு: விசிகவின் மருத்துவமனை முற்றுகை போராட்டம்

மின்தடையால் அடுத்தடுத்து உயிரிழப்புகள் ஏற்பட்டதை அடுத்து விசிகவினர் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். திருப்பூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் கடந்த 22ஆம் தேதி மின்தடை ஏற்பட்டதால் ஆக்சிஜன் செலுத்துவதில் இடையூறு ஏற்பட்டது. இதனால் அடுத்தடுத்து நோயாளிகள் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மருத்துவர்களின் அலட்சியத்தால் இந்த விபத்து ஏற்பட்டதாகவும் , உடனடியாக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி, திருப்பூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி
 

மின்தடையால் அடுத்தடுத்து உயிரிழப்புகள் ஏற்பட்டதை அடுத்து விசிகவினர் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

திருப்பூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் கடந்த 22ஆம் தேதி மின்தடை ஏற்பட்டதால் ஆக்சிஜன் செலுத்துவதில் இடையூறு ஏற்பட்டது. இதனால் அடுத்தடுத்து நோயாளிகள் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மருத்துவர்களின் அலட்சியத்தால் இந்த விபத்து ஏற்பட்டதாகவும் , உடனடியாக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி, திருப்பூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி 24 மணி நேரமும் மருத்துவர்கள் பணி புரியும் வகையில் ஏற்பாடு செய்து தரவேண்டும் என வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக மருத்துவமனை முற்றுகை போராட்டம் நடைபெற்றது.

இப்போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.