×

தாம்பரம்-சென்னை கடற்கரை இடையேயான புறநகர் ரயில் சேவை ரத்து..!

 

தாம்பரம்-சென்னை கடற்கரை இடையேயான புறநகர் ரயில் சேவைகள் இன்று (செப்.14) பராமரிப்பு பணிகள் காரணமாகத் பகுதி நேரமாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதன்படி, மதியம் 2.25 மணிக்கு தாம்பரத்தில் இருந்து சென்னை கடற்கரை நோக்கி புறப்படும் ரயில் மற்றும் மதியம் 3.45 மணிக்கு சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் புறப்படும் ரயில் ஆகியவை இயக்கப்படாது. இச்சேவை மாற்றத்தால் பயணிகள் தங்கள் பயண திட்டத்தை முன்னதாகவே திட்டமிட்டுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.