×

புறநகர் மின்சார ரயில் சேவையில் மீண்டும் பாதிப்பு! சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தவிக்கும் பயணிகள்

 

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து கிளம்பும் புறநகர் மின்சார ரயில்கள் தாமதமாக இருக்கப்படுவதால் ஆயிரக்கணக்கான பயணிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

சென்னை வியாசர்பாடி- பேசின்பிரிட்ஜ் இடையே மின்சார வயரில் பழுது ஏற்பட்டுள்ளது. அதாவது மின்சார ரயிலையும் மின் இணைப்புக் கம்பியையும் இணைக்கக்கூடிய க்ளிப் உடைந்ததால் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஆவடி, திருவள்ளூர் மார்க்கத்தில் செல்லும் மின்சார ரயில் சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பல ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டதால், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.