தமிழகம் மற்றும் உ.பி-யில் குவியும் தரமற்ற மருந்துகள்! மத்திய அரசின் பகீர் அறிக்கை!
மருந்து, மாத்திரைகளின் தரத்தை உறுதி செய்ய தொடர் பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகின்றன.
மத்திய அரசு சார்பிலும், அந்தந்த மாநில அரசு சார்பிலும், மருந்து கிடங்குகள், வினியோகம் மற்றும் விற்பனை இடங்களில் ஆய்வு செய்யப்படுகிறது.
ஆய்வுகளில் கண்டறியப்படும் தரமற்ற மருந்துகளின் விபரங்கள், மத்திய அரசுக்கு மாதம்தோறும் அனுப்பப்படும். பொது மக்களின் தகவலுக்காக, https://cdsco.gov.in/ என்ற இணையதளத்திலும் மத்திய அரசால் வெளியிடப்படும்.
அதன்படி, ஆகஸ்ட் மாதம் செய்த ஆய்வுகளில் நாடு முழுதும், 220 மருந்துகள் தரமற்றவையாக கண்டறியப்பட்டன.
முன்னணி நிறுவனங்கள் தயாரித்த, நோய் எதிர்ப்பு சக்திக்கான மருந்துகள், உயர் ரத்த அழுத்தத்துக்கான மருந்துகள் உள்ளிட்டவற்றின் தரத்தில் குறைபாடு இருந்ததாக கண்டறியப்பட்டது.
அவற்றில், 45 சதவீதம், அதாவது 100 மருந்துகள், தமிழகம், கர்நாடகா, உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் கண்டறியப்பட்டவை.
தமிழகம் மற்றும் உத்தர பிரதேசத்தில், தலா 38 தரமற்ற மருந்துகளும், கர்நாடகாவில், 24 தரமற்ற மருந்துகளும் கண்டறியப்பட்டுள்ளன.