×

“வஞ்சகமும் , சூழ்ச்சியும் நிறைந்த பட்ஜெட்”- சு.வெங்கடேசன்

 

தமிழ்நாட்டில் உறுதியாய் வெற்றி பெற மாட்டோம் என்கிற நம்பிக்கையில் தனது பலிவாங்கும் நடவடிக்கையை பட்ஜெட்டில் இருந்து துவங்கியுள்ளது பாஜக அரசு என எம்பி சு.வெங்கடேசன் கருத்துக் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக சு.வெங்கடேசன் தனது எக்ஸ் தளத்தில், “தமிழ்நாட்டின் அடிப்படைக் கட்டமைப்பிற்கான நிதியினைத் துளியும் ஒதுக்கீடு செய்யாமல் , தனது கைப்பாவைகளாக இருக்கும் சிபிஐ, ஈடி, வருமானவரித்துறை போன்ற துறைகளைக் கொண்டு அரசியல் கட்சிகளை மிரட்டி வளைத்தே தமிழ்நாட்டில் தேர்தலைச் சந்திக்கலாம் என நினைக்கிறது ஒன்றிய அரசு. 

பீகார் உள்ளிட்ட பல மாநிலங்களில் தேர்தல்கள் அறிவிக்கப்படும் போதெல்லாம் ஆயிரக்கணக்கான கோடிகளை அந்த மாநிலங்களுக்கு அள்ளிக் கொடுத்த மோடி அரசு தமிழ்நாட்டிற்கு கிள்ளிக் கூட கொடுக்க மனமில்லாமல் இருக்கிறது. தமிழ்நாட்டில் உறுதியாய் வெற்றி பெற மாட்டோம் என்கிற நம்பிக்கையில் தனது பலிவாங்கும் நடவடிக்கையை பட்ஜெட்டில் இருந்து துவங்கியுள்ளது பாஜக அரசு. வஞ்சகமும் , சூழ்ச்சியும் நிறைந்த பட்ஜெட் ” எனக் குறிப்பிட்டுள்ளார்.